வீட்டு ஏ.ஸி-க்குள் சட்டையைக் கழட்டிப் போட்டுட்டு சவகாசமாகப் படுத்திருந்த பாம்பு..! 

வீட்டு ஏ.ஸி-க்குள் சட்டையைக் கழட்டிப் போட்டுட்டு சவகாசமாகப் படுத்திருந்த பாம்பு..! 

வழக்கமா ஏ.ஸியை ஆன் பண்ணினதும் ஃபேன் ஓட ஆரம்பிக்கும், அதன்பிறகு கம்ப்ரெஸ்ஸர் ஆன் ஆனபிறகு ஈர காற்று மெல்ல அறைக்குள் பரவும்… இந்த இரண்டு சவுண்டும் நமக்கு எப்பவும் பழக்கமா இருக்கும்! இந்த சவுண்டில் ஏதாவது வித்தியாசம் தெரிந்தால்,உடனே ஏ.ஸி மெக்கானிக்கை வரவழைத்து செக் பண்ணச்சொல்வோம் இல்லையா!? அப்படிதான் ஏழுமலையும் சவுண்டு சரியில்லையே என்று மெக்கானிக்கை வரச் சொல்லியிருக்கிறார்.

snake

ஏ.ஸி  இயந்திரத்தை கழட்டி பார்த்தபோது, அதற்குள் பாம்பு சட்டை இருந்திருக்கிறது. மெல்ல டவுட்டு வர, மெக்கானிக் ஏ.ஸி-யின் அடிப் பகுதியில் டார்ச் லைட் அடித்து பார்த்திருக்கிறார்.ரொம்ப வெயிலா இருக்கேன்னு ஒரு பாம்பு சட்டையைக் கழட்டிப் போட்டுட்டு ஒரு ஓரமா படுத்திருந்திருக்கு !
தகவலறிந்து வந்த வனத்துறை ஊழியர்கள் ஏ.ஸி இயந்திரத்துக்குள் இருந்த பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி பிடித்திருக்கிறார்கள்.பிடிபட்ட பாம்பை வனப் பகுதியில் கொண்டு போய் விடப்பட்டிருக்கிறது.இந்த சம்பவம் நடந்திருப்பது புதுசேரி அருகிலுள்ள தேங்காய்திட்டு பகுதியில்!
பரவாயில்லையே ஏ.ஸி-யைப் போட்டவுடனே கண்டு பிடிச்சிட்டாரே என்று ஆச்சரிப்படாதிங்க…

snake

கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக வெளியே போய் இரை தேடுவதும், வெயில் அதிகமானால் உள்ளே வந்து செட்டில் ஆவதுமாக இருந்திருக்கிறது!
இது எப்படி நடந்திருக்கும்…!? ஏ.சி.யின் வெளிப்புற அவுட்டோர் யூனிட்டில் இருந்து வரும் பைப் லைனை சரியாக அடைக்காமல் இருந்ததால், அதன் வழியாக பாம்பு ஏ.ஸி இயந்திரத்துக்குள் புகுந்திருக்கலாம் என வனத்துறையினர் சொல்லியிருக்கிறார்கள்.
தவிர, ஏ.ஸி இயந்திரத்தின் துளைக்கு அருகிலேயே ஒரு மரம் இருந்ததால் எளிதாக பாம்பு புகுந்திருக்கலாம் என்றும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.