மல்லிகைப் பூக்களுடன் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள்! அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!

 

மல்லிகைப் பூக்களுடன் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள்! அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கஞ்சா செடிகளை யாருக்கும் தெரியாமல் பயிரிட்டு வளர்த்து வரும் போக்கு அதிகரித்துள்ளது. சென்ற வாரம் தஞ்சையில் கஞ்சா செடிகளைப் பயிரிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கரூர் மாவட்டம் மைலம்பட்டியில் சுமார் 1.5 ஏக்கர் நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கஞ்சா செடிகளை யாருக்கும் தெரியாமல் பயிரிட்டு வளர்த்து வரும் போக்கு அதிகரித்துள்ளது. சென்ற வாரம் தஞ்சையில் கஞ்சா செடிகளைப் பயிரிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கரூர் மாவட்டம் மைலம்பட்டியில் சுமார் 1.5 ஏக்கர் நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கரூரில் அருணாச்சலம் என்பவர் சுமார் 1.5 ஏக்கர் நிலத்தை மல்லிகை செடிகளைப் பயிரிடுவதற்காக குத்தகைக்கு எடுத்துள்ளார். ஆனால், மல்லிகைச் செடிகளுடன், கஞ்சா செடியையும் பயிரிட்டதைப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

ganja

சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் கஞசா செடிகளை முற்றிலுமாக அழித்தனர். அருணாச்சலம் தலைமறைவான நிலையில் தோட்ட தொழிலாளர்கள் முருகன், தங்கவேலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மல்லிகைப் பூக்களின் வாசத்தில், கஞ்சா செடிகள் வளர்ப்பது தெரியாது என நினைத்து இப்படி வளர்த்து வந்ததாக தெரிவித்தார்கள்.