பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டதும் சினிமா ஸ்டைலில் போட்டோஷூட்

 

பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டதும் சினிமா ஸ்டைலில் போட்டோஷூட்

நாடாளுமன்றத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னம் கிடைத்தவுடன் சினிமா ஸ்டைலில் போட்டோஷூட் நடத்தினார் கமல்ஹாசன்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னம் கிடைத்தவுடன் சினிமா ஸ்டைலில் போட்டோஷூட் நடத்தினார் கமல்ஹாசன்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்று மாலை தேர்தல் நிகழும் தேதி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தால் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனையொட்டி அவர் சினிமா ஸ்டாலில் போட்டோஷூட் நடத்தினார்.

கமல்

பேட்டரி டார்ச்சை கையில் பிடித்தபடி வெவ்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும் பேட்டரி டார்ச் என அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுவரை எந்த அரசியல்வாதியும் இப்படி போட்டோஷூட் செய்ததில்லை. தேர்தல் வேளையில் தங்கள் சின்னத்துடன் மக்களை சென்று சந்தித்து, சின்னத்தை பிரபலப்படுத்துவார்கள். கமல் களத்துக்கு போவாரா?, என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.