நாகையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 

நாகையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கையை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

நாகை: கனமழை எச்சரிக்கையை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

கஜா புயல் கடந்த 16-ம் தேதி நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இதனால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் முற்றிலும் நிர்மூலமாகி உள்ளன. உணவு, வீடு, தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் மக்கள் அகதிகள் போல் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவிகள் செய்து வருகின்றனர்.

ஆனால் ஏற்கனவே கஜா புயலால் உருக்குலைந்து கிடக்கும் மக்களுக்கு அடுத்த இடியாக, கடலூர், நாகை, திருவாரூர், சிவகங்கை,  தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு இருக்கிறது. இதனால் ஏற்கனவே சிரமத்தில் இருக்கும் மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். உதவ சென்ற தன்னார்வலர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றன.

இந்நிலையில், கனமழை எச்சரிக்கையை அடுத்து நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.