தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் கனமழை பெய்யும் இடங்களையே ஆரஞ்சு நிறத்தில் குறிப்பிடுகிறோம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், “தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. சூறவாளி காற்று வீசுவதால் குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரு நாட்களுக்கு மிதமான மழை தொடரும்.தமிழகத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் கனமழை பெய்யும் இடங்களையே ஆரஞ்சு நிறத்தில் குறிப்பிடுகிறோம்” எனக்கூறினார்.