தந்தை கண்டித்ததால் 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை

 

தந்தை கண்டித்ததால் 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை

தந்தை கண்டித்ததால் மனமுடைந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

கன்னியாகுமரிதந்தை கண்டித்ததால் மனமுடைந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோட்டார் கலைநகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் சஞ்சய் (17). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

படிப்பில் கவனக்குறைவாக சஞ்சய் இருந்து வந்துள்ளார். நன்கு படிக்குமாறு  சஞ்சய்யின் தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சஞ்சய், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சக நண்பர்களிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு அவரது வீட்டின் அருகே இருந்த முந்திரி மரத்தில் சஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.