செல்ஃபோனில் பேசிய படி தேசிய கொடி ஏற்றிய அதிகாரி; நடந்தது என்ன?

 

செல்ஃபோனில் பேசிய படி தேசிய கொடி ஏற்றிய அதிகாரி; நடந்தது என்ன?

குடியரசு தினத்தன்று தேசிய கொடியை செல்ஃபோனில் பேசியபடி ஏற்றிய அதிகாரியின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: குடியரசு தினத்தன்று தேசிய கொடியை செல்ஃபோனில் பேசியபடி ஏற்றிய அதிகாரியின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் 70-வது குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் இந்தியா குடியரசு அடைந்த வரலாற்றை நினைவு கூறும் விதமாக, அரசு அலுவலகங்கள் பள்ளிகள் ஆகியவற்றில் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம்.

அந்த வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரி இப்ராஹிம் என்பவர் செல்ஃபோனில் பேசிய படி தேசிய கொடியை ஏற்றினார். 

தேசிய கொடியை அவமதிப்பது போன்ற இந்த செயல் தொடர்பான காட்சிகள் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சிகளில் அந்த காட்சிகள் வெளியாகியது. இதனையடுத்து, அந்த அதிகாரி மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.