சபரிமலையில் பண்பாடுதான் முக்கியம் பெண் பாடு முக்கியமில்லை: எதுகை மோனையில் சர்ச்சை கிளப்பும் தமிழிசை

 

சபரிமலையில் பண்பாடுதான் முக்கியம் பெண் பாடு முக்கியமில்லை: எதுகை மோனையில் சர்ச்சை கிளப்பும் தமிழிசை

சபரிமலையில் பழக்கப்பட்டு வரும் பண்பாடுதான் முக்கியம் பெண் பாடு முக்கியமில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை: சபரிமலையில் பழக்கப்பட்டு வரும் பண்பாடுதான் முக்கியம் பெண் பாடு முக்கியமில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு செல்லும் பெண் பக்தர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர். மேலும் இந்த போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினர் செய்து சபரிமலையை கலவர பூமியாக மாற்ற முயல்கிறார்கள் என கேரள முதல்வர் உள்ளிட்ட பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சபரிமலை விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐய்யப்பன் கோயிலின் பன்னெடுங்காலமாக பழக்கப்பட்டுவரும்…… பண்பாடு.. பாதுகாக்கப்பட வேண்டும்…. அங்கு…பெண்பாடு முக்கியமில்லை… பழக்கப்பட்டுவரும்…பண்பாடுதான் முக்கியம்… இது மூடநம்பிக்கையல்ல… முடிவான நம்பிக்கை.. இது தீர்க்கக்கூடிய..நம்பிக்கையல்ல…தீர்க்கமான..தீவிரமான நம்பிக்கை என பதிவிட்டுள்ளார்.

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அந்த போராட்டத்திற்கு மத்தியில் ஆளும் பாஜக-வின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருவது கண்டனத்திற்குரியது என பலர் கூறி வருகின்றனர். மேலும், தமிழிசை சவுந்தரராஜன் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு சபரிமலையில் போராட்டக்காரர்களால் பெண்கள் படும் பாட்டை ட்விட்டரில் எதுகை மோனையோடு பெண் பாடு முக்கியமில்லை என கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.