கொரோனா பரவல் எதிரொலி – தமிழகத்தில் 37 ரயில்கள் ரத்து

 

கொரோனா பரவல் எதிரொலி – தமிழகத்தில் 37 ரயில்கள் ரத்து

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. உயிரிழப்பும் 200ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. மேற்கொண்டு பாதிப்பைக் கட்டுப்படுத்த மே 6ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மதியம் 12 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் இயங்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி – தமிழகத்தில் 37 ரயில்கள் ரத்து

இந்நிலையில் கொரோனா பரவல் எதிரொலி – 37 ரயில்கள் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போதிய பயணிகள் வரத்து இல்லாததால் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பல்லவன், வைகை, தேஜஸ், மலைக்கோட்டை உள்ளிட்ட முக்கிய ரயில்களும், சென்ட்ரலில் இருந்து புறப்படும் ஏற்காடு, சேரன் மற்றும் கோவை செல்லும் ரயில்கள் உள்ளிட்ட முக்கிய ரயில்களும் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளாது.