கொரோனா அறிகுறிகளை போக்கும் – கபசுர குடிநீருக்கு மக்களிடையே ஏற்பட்ட திடீர் மவுசு

 

கொரோனா அறிகுறிகளை போக்கும் – கபசுர குடிநீருக்கு மக்களிடையே ஏற்பட்ட திடீர் மவுசு

கொரோனா வைரஸ் அறிகுறிகளை கபசுரக் குடிநீர் போக்கும் என்பதை தொடர்ந்து அதை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சென்னை: கொரோனா வைரஸ் அறிகுறிகளை கபசுரக் குடிநீர் போக்கும் என்பதை தொடர்ந்து அதை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

கொரோனா பாதிப்பை குணப்படுத்த நேரடியான மருந்து எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதற்காக தமிழ்நாட்டை சேர்ந்த சித்த மருத்துவர்கள் கபசுர குடிநீரை பரிந்துரை செய்தனர். அதனால் சித்த வைத்தியம் மீது நம்பிக்கை கொண்ட பொதுமக்கள் அதை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ttn

ஏனெனில், டெங்கு காய்ச்சலின் பரவியபோது நிலவேம்பு குடிநீரை குடித்ததால் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றதை மக்கள் நினைவில் வைத்துள்ளனர். அதனால் கபசுரக் குடிநீர் கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை காக்கும் என்று நம்புகின்றனர். அத்துடன் கொரோனா தொற்றுக்கு எதிராக கபசுரக் குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என மத்திய அரசின் ஆயுஷ் துறை கபசுர சூரணத்தை பரிந்துரை செய்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள மத்திய அரசின் மருந்து நிறுவனமான இம்காப்ஸ் மருத்துவமனையில் கபசுர சூரணத்தை வாங்க பொதுமக்கள் அதிகளவில் ஆர்வத்துடன் வரத் தொடங்கியுள்ளனர். 10 கிராம் அளவுள்ள கபசுர சூரணம் 110 ரூபாய்க்கு இங்கு விற்கப்படுகிறது.