ஒருவருட ஃபேஸ்புக் காதல்: திருநங்கையை கரம்பிடித்த இளைஞர்!

 

ஒருவருட ஃபேஸ்புக் காதல்: திருநங்கையை கரம்பிடித்த இளைஞர்!

முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்ட  திருநங்கையை  இளைஞர் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளார். 

ஒருவருட ஃபேஸ்புக் காதல்: திருநங்கையை கரம்பிடித்த இளைஞர்!

கடலூர் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்ட  திருநங்கையை  இளைஞர் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தைச் சேர்ந்த லட்சுமணன். இவர் மும்பையில் திரைப்படங்களுக்கு செட் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கும் இவர் கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தை சேர்ந்த சேகர்-அமுதா தம்பதிக்குப் பிறந்த திருநங்கை அமிர்தாவுக்கும் முகநூலில் நட்பு ஏற்பட்டுள்ளது. பிறகு இந்த பழக்கம் காதலாக மாற லட்சுமணன் அமிர்தாவிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அமிர்தாவும் லட்சுமணனும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். 

amairtha

இந்நிலையில் லட்சுமணன் -அமிர்தா இருவரும் தங்கள் காதல் குறித்து இருவீட்டாரிடத்திலும் தெரிவிக்க இரண்டு குடும்பத்தினரும் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். இதையடுத்து  குடும்பத்தினர் முன்னிலையில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று  லட்சுமணன் – அமிர்தா திருமணம் சிறப்பாக நடைபெற்றது. 

இதுகுறித்து கூறியுள்ள அமிர்தா, ‘நான் பி.எஸ்ஸி வரை படித்துள்ளேன். கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீஸ் வேலைக்கு  முயற்சி செய்துவருகிறேன். நானும் லட்சுமணனும் ஒருவருடமாகக் காதலித்து வந்தோம். வீட்டில் எங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததால், எங்கள் திருமணத்தை முறைப்படி பதிவுசெய்து திருவந்திபுரம் ஸ்ரீதேவநாத சுவாமி கோயிலில் நடத்த முடிவுசெய்தோம். ஆனால்  இதற்கு கோவில் நிர்வாகத்தினர் ஒத்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனுக்கொடுத்து அனுமதி வாங்கிய பின் திருமணம் செய்து கொண்டோம்’ என்றார்.