ஆடுமேய்க்கச் சென்ற 9 வயது சிறுமி.. கிணற்றில் சடலமாக மீட்பு !

 

ஆடுமேய்க்கச் சென்ற 9 வயது சிறுமி.. கிணற்றில் சடலமாக மீட்பு !

இந்த சிறுமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டின் அருகே உள்ள இடத்தில் ஆடு மேய்த்து விட்டு வருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள வேண்டுராயபுரம் பகுதியில் வசித்து வரும் கருப்பசாமி-ராஜலட்சுமி தம்பதிக்கு குருலட்சுமி என்ற 9 வயது மகள் இருந்தார். இந்த சிறுமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டின் அருகே உள்ள இடத்தில் ஆடு மேய்த்து விட்டு வருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

ttn

சிறுமியுடன் அவளது தங்கையும் சென்றுள்ளார். அன்று வெகு நேரம் ஆகியும் குருலட்சுமி வீட்டுக்கு வரவில்லையாம். ஆனால், அவளது தங்கை மட்டும் வீடு திரும்பியுள்ளார். இதனால் பதற்றமடைந்த பெற்றோர் சிறுமியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். எங்கேயும் சிறுமி கிடைக்க வில்லை என்பதால் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து இரண்டு நாட்களாகச் சிறுமியைத் தேடி வந்துள்ளனர். 

ttn

இந்நிலையில் இன்று காலை அந்த சிறுமி அவரது வீட்டில் அருகே இருந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருப்பாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.