குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் குளிக்க தடை!

 

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் குளிக்க தடை!

தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்  சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முதலில்  ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக் குளிக்கத்தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தொடர் மழையால் மெயின் அருவியிலும்  தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

#BREAKING News ?

குற்றால அருவிகளிள் வெள்ள பெருக்கு??

Semma climate ?️?️

For season updates install KUTRALAM LIVE App: https://t.co/dRAT7guWzc#Kutralam #KutralamLive #Courtallam #Asuran #PaisaNoteVideoSong #ThursdayThoughts #Madras380 #Season #குற்றாலம் pic.twitter.com/yorEDkqAyb
— ?ThalaSurya?NKPᴺᴼᴹᵉᵃⁿˢᴺᴼ? (@thalasurya_AFC) August 22, 2019

இருப்பினும் தண்ணீர் வரத்து அதிகரித்து குற்றால அருவிகளின் அழகைக் காணப் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். இருப்பினும்  பாதுகாப்பு காரணங்களுக்காக  சுமார் 200 மீட்டர் முன்பாகவே பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.