கொல்லிமலை மலைவாழ் மக்கள் வீட்டில் சாப்பிட்ட அண்ணாமலை

 
op

கொல்லிமலை மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடிய அண்ணாமலை பாரம்பரிய உணவு சாப்பிட்டு மகிழ்ச்சி

கொல்லிமலை மலைவாழ் வீட்டில் பாரம்பரிய உணவு சாப்பிட்டு மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடி இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை .

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையில் தமிழக பாஜக சார்பில் மூன்று நாள் இளைஞர் அணி பயிற்சி முகாம் நடக்கின்றது .  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலையில் அந்த முகாமினை தொடங்கி வைத்தார்.  அதன் பின்னர் மலைவாழ் மக்களிடம் கலந்துரையாடினார்.  

bj

 அப்போது மலைவாழ் மக்கள் 100 நாள் வேலை வாய்ப்பு நாட்கள் குறைந்து விட்டதாகவும் 100 நாள் வேலைக்கான கூலி குறைத்து வழங்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்கள்.  அவற்றைக் கேட்டுக் கொண்ட அண்ணாமலை ,  100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு தவறாமல் 228 ரூபாய் வழங்க வேண்டும் என்றும்,   கூடுதலாக அந்த திட்டத்திற்கு வேலை நாட்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும்  தெரிவித்தார்.

 இதன் பின்னர் மலைவாழ் மக்கள் குடியிருந்து வரும் ஒரு வீட்டிற்குள் சென்று அங்கு குடும்பத்தினருடன் பாரம்பரிய உணவு வகைகளான களி,  சிவப்பு அரிசி சாதம் பல்வேறு வகையான உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார்.   அவருடன் முகாமில் கொல்லிமலை நிர்வாகிகள் உட்பட மாவட்ட தலைவர்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள் .