‘முதல்வரை பெருமைப்படுத்தும் விதமாக’.. தமிழகத்தில் முதன்முறையாக ‘எடப்பாடியார் நகர்’ திறப்பு!

‘முதல்வரை பெருமைப்படுத்தும் விதமாக’.. தமிழகத்தில் முதன்முறையாக ‘எடப்பாடியார் நகர்’ திறப்பு!

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊர்களின் பெயர்களுக்கும் தெருக்களின் பெயர்களுக்கும் ஒவ்வொரு பெயர் காரணம் இருக்கும். பெரும்பாலும் சுதந்திர போராட்ட வீரர்கள், மறைந்த தலைவர்கள், தியாகிகள், அரசியல் பிரமுகர்கள் என அவர்களின் நினைவாக அவர்களது பெயர் சூட்டப்படும். அந்த வகையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோர் பெயர்களில் பல இடங்கள் அமைந்துள்ளன.

‘முதல்வரை பெருமைப்படுத்தும் விதமாக’.. தமிழகத்தில் முதன்முறையாக ‘எடப்பாடியார் நகர்’ திறப்பு!

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழகத்தில் முதன்முறையாக ‘எடப்பாடியார் நகர்’ என ஒரு பகுதிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட தோப்புபாளையத்தில் இருக்கும் ஒரு குடியிருப்பு பகுதிக்கு “எடப்பாடியார் நகர்” பெயரிடப்பட்டுள்ளது. அந்த நகரை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் அதனை திறந்து வைத்திருக்கிறார்.