“கட்சிகளுக்கு புதிய சின்னங்களை ஒதுக்குவது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்”

 

“கட்சிகளுக்கு புதிய சின்னங்களை ஒதுக்குவது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்”

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

“கட்சிகளுக்கு புதிய சின்னங்களை ஒதுக்குவது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்”

நிரந்தர சின்னங்கள் ஒதுக்கும் சட்டப்பிரிவை எதிர்த்த வழக்கில், தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ல அறிக்கையில், “ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். விரைந்து வாகுப்பதிவை நடத்த வாக்காளர்களின் வசதிக்காக சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சின்னங்களை பிரபலபடுத்த அரசு நிதியையோ அல்லது அரசு இயந்திரத்தையோ பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சின்னத்தை திரும்ப பெறுவது, தேர்தலை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே விசாரணையை ரத்து செய்ய வேண்டும்” என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு 3 வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.