விபரீதத்தில் முடிந்த வாய்ச் சவடால்… ‘கொலை செய்வேன் என்றான், நான் முந்திக்கொண்டேன்’ – கொலையாளி வாக்குமூலம்! 

 

விபரீதத்தில் முடிந்த வாய்ச் சவடால்… ‘கொலை செய்வேன் என்றான், நான் முந்திக்கொண்டேன்’ – கொலையாளி வாக்குமூலம்! 

ஆட்களைக் கூட்டிவந்து போட்டுத் தள்ளிவிடுவேன் என்று சும்மா உதார் விட்டவரைக் கொலை செய்த டைல்ஸ் தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். பயத்தில் முந்திக்கொண்டு கொலை செய்தேன் என்று அவர் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயலில் ஒரு வாடகை வீட்டில், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டைச் சேர்ந்த முரளி (25), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிம்சன் (27) வசித்து வந்தனர். இவர்களுடன் அரவிந்தன், சுப்பிரமணி ஆகியோரும் தங்கியுள்ளனர்.

ஆட்களைக் கூட்டிவந்து போட்டுத் தள்ளிவிடுவேன் என்று சும்மா உதார் விட்டவரைக் கொலை செய்த டைல்ஸ் தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். பயத்தில் முந்திக்கொண்டு கொலை செய்தேன் என்று அவர் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயலில் ஒரு வாடகை வீட்டில், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டைச் சேர்ந்த முரளி (25), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிம்சன் (27) வசித்து வந்தனர். இவர்களுடன் அரவிந்தன், சுப்பிரமணி ஆகியோரும் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டிட வேலை செய்து வந்துள்ளனர். முரளியும், சிம்சனும் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளனர். தினமும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பியதும் வீட்டிலேயே மது அருந்துவது வழக்கமாக இருந்துவந்துள்ளது.

simsen

முரளிக்கும் சிம்சனுக்கும் நீண்ட காலமாக பிரச்னை இருந்துவந்துள்ளது. ஆனால், நண்பர்கள்தான் இருவரையும் சமாதானம் செய்து ஒன்றாக தங்க வைத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு முரளியின் பர்ஸ் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இதை சிம்சன்தான் எடுத்திருப்பார் என்று முரளி கூறவே இருவருக்கும் சண்டை வந்துள்ளது. இந்த நிலையில், முரளி வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்றபோது, சிம்சன் கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது. அவரை போலீசார் விரைந்து பிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “முரளியின் குடும்பத்தினர் மதுரவாயலில் வசித்து வந்துள்ளனர். வேப்பம்பட்டில் சொந்தமாக வீடுகட்டியதால் அவர்கள் அனைவரும் அங்கே சென்றுவிட்டனர். முரளி மட்டும் இங்கே நண்பர்களுடன் தங்கி வேலைக்கு சென்றுவந்துள்ளார். அவருடன் தங்கிய சிம்சனுக்கும் முரளிக்கும் ஏற்கனவே சண்டை இருந்துவந்துள்ளது. கடந்த 14ம் தேதி முரளி, சிம்சன் மற்றும் இருவர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது முரளி, “இது என்னுடைய ஏரியா, இப்போதே வேப்பம்பட்டில் இருந்து ஆட்களை இறக்கி உன்னை போட்டுத்தள்ளிவிடுவேன்” என்று உதார் விட்டுள்ளார். பதிலுக்கு சிம்சன், “என்னாலும் கன்னியாகுமரியிலிருந்து ஆட்களை அழைத்துவந்து உன்னை போட்டுத்தள்ள முடியும்” என்று கூறியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் அனைவரும் தூங்கச் சென்றுவிட்டனர். ஆனால், சிம்சனுக்கு தூக்கம் வரவில்லை. முரளி சொன்னது போல நம்மைக் கொலை செய்துவிட்டால் என்ன ஆவது என்று எண்ணம் மனதுக்குள் ஓடியது. இதனால், தனி அறையில் படுத்திருந்த முரளியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்திருக்கிறார்.

murali

அனைவரும் போதையில் இருந்துள்ளதால் முரளியின் அலறல் கேட்கவில்லை. உடனே, தப்பிக்க திட்டமிட்ட சிம்சன், அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டும் என்று கூறி மற்றொரு அறையில் படுத்திருந்த சுப்பிரமணியிடம் தன்னை பஸ் ஸ்டாண்டில் விடும்படி கூறியுள்ளார். அவரும் கோயம்பேடு பஸ்நிலையத்தில் விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பியபோது முரளி இறந்து கிடப்பதைக் கண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சிம்சனை கைது செய்தோம். உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம். போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளது தெரிகிறது.
ஏன் கொலை செய்தாய் என்று சிம்சனிடம் விசாரித்தபோது, “ஆட்களை அழைத்துவந்து கொலை செய்துவிடுவேன் என்று முரளி கூறினான். அதனால், அவனை முந்திக்கொண்டு நான் அவனைக் கொலை செய்தேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளான். குடிபோதையில் உதார், வீரவசனம் பேசியது கொலையில் முடிந்துவிட்டது” என்றனர்.