நிரம்பிய பவானி சாகர் அணை : வினாடிக்கு 18,000 கன அடி நீர் திறப்பு !

 

நிரம்பிய பவானி சாகர் அணை : வினாடிக்கு 18,000 கன அடி நீர் திறப்பு !

பருவ மழை வலுவடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

பருவ மழை வலுவடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. அனைத்து அணைகள் மற்றும் ஏரிகளில் நிரம்பி உபரிநீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இந்த வருடம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 8% சதவீதம் மழை அதிகமாகப் பெய்துள்ளது என்று  வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. 

dam

இந்நிலையில், நீலகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணைக்கு நேற்று நள்ளிரவு முதல் திடீரென நீர் வரத்து அதிகரித்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் வந்துள்ளது. இன்று காலை நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாகக் குறைந்த நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.