“ஜனவரி.15 ” முல்லை பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னி குக்கின் பிறந்தநாள்..!

 

“ஜனவரி.15 ” முல்லை பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னி குக்கின் பிறந்தநாள்..!

மக்களின் குடிநீருக்கு ஆதாரமான விளங்கும் அந்த அணையை பல்வேறு சிக்கல்களுக்கிடையே கட்டியதாலும் தேனி மக்கள் அவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். 

தேனி அருகே கேரளா எல்லையில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த அணையைக் கட்டியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த எஞ்சினியர்  கர்னல் ஜான் பென்னி குக். அந்த 5 மாவட்டங்களில் விளையும் பயிர்களைச் செழிக்க வைத்ததாலும், அந்த மக்களின் குடிநீருக்கு ஆதாரமான விளங்கும் அந்த அணையை பல்வேறு சிக்கல்களுக்கிடையே கட்டியதாலும் தேனி மக்கள் அவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். 

ttn

அதுமட்டுமில்லாமல், தேனியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், பென்னி குக்கின் புகைப்படம் இருக்கும். இவரது பிறந்த நாள் பொங்கல் திருநாளான ஜனவரி 15 ஆம் தேதி. வழக்கமாக இவரது பிறந்தநாளைத் தேனி மக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடுவர். அதே போல இந்த ஆண்டும் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, முதல் முறையாக இவரது பிறந்தநாள் இந்த ஆண்டு அரசு விழாவாகக் கொண்டாடப்பட உள்ளது. சட்டப்பேரவையிலும் இவரது பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

ttn

இவரது பிறந்தநாளான 15 ஆம் தேதியன்று, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கர்னல் ஜான் பென்னி குக்கின் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.