கொரோனாவால் நன்மை – திருப்பூருக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக வாய்ப்பு

 

கொரோனாவால் நன்மை – திருப்பூருக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக வாய்ப்பு

திருப்பூருக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய வர்த்தக வாய்ப்பு கிடைத்துள்ளது.

திருப்பூர்: திருப்பூருக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய வர்த்தக வாய்ப்பு கிடைத்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 24 லட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 6 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு முழு வீச்சில் பரவுவதற்கு முன்பாகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பெருமளவில் நோய்த் தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கால் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகி விட்டது.

tirupur

ஆனால் அதேசமயம் கொரோனாவால் பல புதிய தொழில்களுக்கான தேவையும், வாய்ப்பும் உருவாகியுள்ளது. குறிப்பாக இதுவரை ஆன்லைன் மளிகை பொருட்கள் வர்த்தகம் மற்றும் ஹோம் டெலிவரி சேவைகளுக்கான தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அதனால் பிளிப்கார்ட், அமேசான், பிக் பேஸ்கட் போன்ற பல முன்னணி ஆன்லைன் சேவை நிறுவனங்களும் இந்த சேவையில் மும்முரமாக களமிறங்கியுள்ளன. மேலும் பின்னலாடை தயாரிப்பில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் நகரமான திருப்பூருக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய வர்த்தக வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனாவால் பல உயிர்கள் பறிபோயுள்ள நிலையில், கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல கொரோனாவால் ஒரு சில நன்மைகளுக்கும் வழிவகை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.