‘ஒழுங்கா வீட்டுல இருக்க மாட்டீங்க..’ வெளியே சுற்றித்திரிந்த நபர்கள் மீது தண்ணீர் பீச்சி அடித்த போலீசார்!

 

‘ஒழுங்கா வீட்டுல இருக்க மாட்டீங்க..’ வெளியே சுற்றித்திரிந்த நபர்கள் மீது தண்ணீர் பீச்சி அடித்த போலீசார்!

நாட்டின் அபாய நிலை புரியாமல், மக்கள் இவ்வாறு செய்வது போலீசாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நள்ளிரவு மதுரையை சேர்ந்த நபர் உயிரிழந்தார். கொரோனா தீவிரம் அதிகரித்துள்ளதால் முதல்வர் உத்தரவின் படி, தமிழகம் முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, கொரோனா அதிகமாக பரவும் அபாய கட்டத்தில் தற்போது இந்தியா இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி  அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ttn

ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பினும், சிலர் வீட்டிலேயே இருக்காமல்ஆங்காங்கே சுற்றித் திரிகின்றனர்.  நாட்டின் அபாய நிலை புரியாமல், மக்கள் இவ்வாறு செய்வது போலீசாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால், அரசின் உத்தரவை மீறி வெளியே வரும் நபர்களுக்கு தோப்பு கரணம் போட வைப்பது உள்ளிட்ட நூதன தண்டனை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வெளியே சுற்றித் திரிந்த பர்கள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து, வீட்டிற்கு விரட்டியுள்ளனர்.