ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் ஆண் ‘அன்னபூரணி’!

 

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் ஆண் ‘அன்னபூரணி’!

ஜெயங்கொண்டம் அருகே 3 தலைமுறைகளாக விவசாயிகளுக்கு, பள்ளி மாணவர்களுக்கும் உதவும் வகையில் இட்லி விற்பனை செய்துவருகிறார் ராஜீவ் காந்தி…

இளையபெருமாள்நல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி. இவருடைய தந்தை மற்றும் தாத்தா முதன்முதலில் 10 பைசாவுக்கு இட்லி விற்பனையை தொடங்கியதாகவும், அதன் பின் மெல்ல மெல்ல 20, 50 பைசாவாக விலை உயர்த்தி தற்போது 1 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் ராஜீவ் காந்தி கூறுகிறார். வெறும் இலாபத்திற்காக மட்டுமல்லாது, மக்களின் பசியை போக்குவதற்காகவே உணவகம் நடத்துவதாகவும், மீதி நேரங்களில் விவசாயம் செய்வதாகவும் கூறுகிறார் ராஜீவ்…

விலை குறைவாக இருப்பதால் தரமில்லாமல் இருக்கும் என நினைக்க வேண்டும்.  காலை 6 மணி முதல் ராஜீவ் காந்தியின் கடையில் சுடசுட சுவையான இட்லி கிடைக்கும் என்கின்றனர் கிராம மக்கள்.  மேலும் காலை 4 மணிக்கு கடையை திறக்கும் இவர்,  இரவு 10 மணிக்கு தான் கடையை மூடுவாராம்.  ராஜீவ் காந்தியின் நிலத்திலே உளுந்து, அரிசு ஆகியவற்றை பயிர் செய்து அதனையே இட்லிக்கு பயன்படுத்துகிறாராம்.  வயல் வேலைக்கு செல்லும் விவசாயிகளும், பள்ளி மாணவர்களும் மதிய உணவாக கூட ராஜீவின் இட்லியை வாங்கி செல்வதும் உண்டாம்.  அதுமட்டுமின்றி கையில் காசு இன்றி பசியோடு வருவோருக்கு இலவசமாக கூட உணவை கொடுப்பாராம் ராஜீவ்…. அப்ப இவரு ஆண் அன்னபூரணி தானே….