ஒரு ஆசிரியைக்காக எழுந்த ஆதரவு குரல்… வாபஸ் பெறப்பட்ட சஸ்பெண்ட்

 

ஒரு ஆசிரியைக்காக எழுந்த ஆதரவு குரல்… வாபஸ் பெறப்பட்ட சஸ்பெண்ட்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் வட்டம், அரசவெளி அரசு பழங்குடியினா் நல உண்டி உறைவிட ஆரம்ப பள்ளி இடைநிலை ஆசிரியராக பணியாற்றுபவர் க.மகாலட்சுமி. இவர் ஆதிராவிடர் நலத்துறையில் நடந்த முறைகேடுகளை சமூக வலைதளங்களில் அம்பலபடுத்தியவர். இதுதவிர, பள்ளி, சத்துணவுக்கான நிதியை சுரண்டியவர்களின் முகத்திரையை கிழித்தவர். மேலும் குழந்தைகள் உரிமைகள், நலன்கள் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டு வருபவர்.

ஒரு ஆசிரியைக்காக எழுந்த ஆதரவு குரல்… வாபஸ் பெறப்பட்ட சஸ்பெண்ட்

இவரது செயல்பாடு, அங்குள்ளவர்களுக்கு தொடர் இடையூறாக இருந்தது. மேலும், சுரண்டல் அதிகாரிகள் குறித்து, இவர் ஆதாரப்பூர்வமாக, புகார் மனு கொடுத்தும், கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டனர். இவரை, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் நோக்கில், அதிகாரிகள் திட்டம் தீட்டி பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஆசிாியை மகாலட்சுமி சஸ்பெண்ட் செய்ததற்கு கண்ட குரல்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. விசாரணாஇ பள்ளி தலைமை ஆசிரியர், அரசு உத்தரவு மதிக்காமல் தொடக்கப் பள்ளியை ஒருங்கிணைத்து தொடர்ந்து பள்ளியை நடத்தி வந்தது, உயர் அலுவலா்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், பள்ளி குழந்தைகளுக்கு அசைவ உணவு தயாரித்து, பள்ளி குழந்தைகளுக்கு வழங்கியது, வெளியில் பணம் வசூல் செய்து, பள்ளிக்கு உலோக மேற்கூரை அமைத்தது, அலுவலர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்தது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் எதிர்ப்புக்கு பிறகு, மீண்டும் அவரது பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.