ஏம்ப்பா பத்ரிகை நடத்துறீங்களா இல்லை திருடனுக்கு ஹிண்ட் குடுக்குறீங்களா?

 

ஏம்ப்பா பத்ரிகை நடத்துறீங்களா இல்லை திருடனுக்கு ஹிண்ட் குடுக்குறீங்களா?

அட்டைப்பட கட்டுரை சொன்ன செய்தி விவசாயத்தில் ஆர்வம் இருக்கும் சிலருக்கு இன்ஸ்பிரேஷன் என்றால், கடையநல்லூருக்குப் பக்கம் டாஸ்மாக்கில் அமர்ந்து சைட்டிஷ்க்கு வழியில்லாமல் யோசித்துகொண்டிருந்த கொள்ளையர்கள் இருவருக்கு அருமையான டிப்ஸ்ஸாகவும் அமைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

நெல்லையில் தனியாக வசித்துவந்த தாத்தா பாட்டி வீட்டில் கொள்ளை அடிக்க வந்தவர்களை முறத்தால் புலியை அடித்துவிரட்டிய கதைக்கு நிகராக வெறும் செருப்பாலும் சேராலும் அடித்துவிரட்டியதை ட்ரெண்டாக்கினோம் அல்லவா? அதோட பேக்ரவுண்ட் கதை கேளுங்க. விகடன் குழுமத்தில் இருந்து வார, மாதம் இருமுறை, மாத இதழ்கள் என நிறைய வெளிவருகின்றன. அதில் ஒன்று பசுமை விகடன் என்பதும், இது விவசாயம் மற்றும் துணை தொழில்கள் குறித்த செய்திகள், கட்டுரைகள், பேட்டிகளை வெளியிட்டு வருவது ஒன்றும் புதிய செய்தியல்ல. கடந்த இதழில், நெல்லை கடையம் பக்கம் இரண்டரை ஏக்கர் நிலத்தில் வருடத்திற்கு 8 லட்சம் சம்பாதிக்கும் இரு வயதான தம்பதியினரைப் பற்றிய அட்டைப்பட கட்டுரை வெளிவந்தது.
 

Cover story that lead to a close disaster

அட்டைப்பட கட்டுரை சொன்ன செய்தி விவசாயத்தில் ஆர்வம் இருக்கும் சிலருக்கு இன்ஸ்பிரேஷன் என்றால், கடையநல்லூருக்குப் பக்கம் டாஸ்மாக்கில் அமர்ந்து சைட்டிஷ்க்கு வழியில்லாமல் யோசித்துகொண்டிருந்த கொள்ளையர்கள் இருவருக்கு அருமையான டிப்ஸ்ஸாகவும் அமைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். கட்டுரையில் பேசப்பட்ட 77 வயதான சண்முகவேலும் அவருடைய மனைவி செந்தாமரையும் வீட்டில் தனியாக வசிப்பதாகவும், பிள்ளைகள் வெளியூரில் வசிப்பதாகவும், வருமானம் லட்சங்களில் என்பதும் கொள்ளையடிக்க போதுமான டிப்ஸாக அமைந்துவிட்டது கொள்ளையர்களுக்கு. கையில் அரிவாளோடு கிளம்பி வந்துவிட்டார்கள். ஏம்ப்பா, உதவி ஆசிரியர்களா, கொஞ்சம் கவனமா இருங்கப்பா, எது தேவையோ அதை மட்டும் கட்டுரையில வைங்கப்பா! அது சரி, இந்த செய்தியில டிப்ஸ் ஏதும் தெரியாம வந்திருக்குதான்னு பாத்து சொல்லுங்கப்பு!