எங்களுக்கு இது போதுங்க…. கெத்துக்காட்டும் அமமுகவினர்!

 

எங்களுக்கு இது போதுங்க…. கெத்துக்காட்டும் அமமுகவினர்!

தமிழகத்தில் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 இடங்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. அதில் 4 தொகுதிகளில் அதிமுக தோல்வியடைய அமமுக காரணமாக இருந்துள்ளது.

தமிழகத்தில் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 இடங்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. அதில் 4 தொகுதிகளில் அதிமுக தோல்வியடைய அமமுக காரணமாக இருந்துள்ளது.

தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களை வென்றுள்ளது. அதிமுக 9 இடங்களை கைப்பற்றி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி, வலுவான கூட்டணி அமைத்தற்கு பலனாக சில சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.
 
அதிமுக மற்றும் திமுகவை வீழ்த்தி தேர்தலில் வெற்றி பெறுவதே தனது நோக்கம் என பரப்புரையின் போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். ஆனால், அதிமுக வாக்குகளை பிரித்து அதன் மூலம் திமுகவை வெற்றி பெற வைப்பதுதான் அவரது நோக்கம் ‌என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.  எங்களை அழிக்க வந்தவர்களே அமமுகவினர், எங்களது தோல்விக்கு அவர்களே காரணம் என அதிமுகவினர் புலம்பி தவிக்கும் நிலையில் நாங்க ஜெயிக்கலனாலும் பரவாயில்லை அதிமுகவை ஜெயிக்க விடவில்லையே என அமமுகவினர் மார்தட்டிக்கொள்கின்றனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள இந்நிலையில், 4 தொகுதிகளில், அதிமுகவின் வெற்றியை அமமுக தடுத்துள்ளது தெரியவந்துள்ளது. அதிமுகவின் கோட்டையான தூத்துக்குடி, மதுரை மற்றும் தேனிப் பகுதிகளில் அமமுகவால் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், ஆண்டிபட்டி பெரியகுளம் உள்ளிட்ட 3 தொகுதிகளில் அதிமுக- திமுக இடையே இருந்த வாக்கு சதவீதத்தைவிட அமமுகவின் வாக்குகள் அதிகமாகும்.