“அதிமுக – பாஜக கூட்டணி, தமிழகத்திற்கு நல்லதல்ல” – தமிமுன் அன்சாரி

 

“அதிமுக – பாஜக கூட்டணி, தமிழகத்திற்கு நல்லதல்ல” – தமிமுன் அன்சாரி

ஈரோடு

அதிமுக – பாஜக கூட்டணி தமிழகத்திற்கு நல்லதல்ல என்றும், இதுகுறித்து அதிமுக தொண்டர்கள் தான் கவலைப்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் கட்சி அலுவலகத்தை திறந்துவைத்த பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த மனிதநேய ஜனநாயக கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாகவும், சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் இறுதியில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

“அதிமுக – பாஜக கூட்டணி, தமிழகத்திற்கு நல்லதல்ல” – தமிமுன் அன்சாரி

மேலும், அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் உதயநிதி ஸ்டாலின் மீது அரசு கொடுக்கும் நெருக்கடி தேவையற்றது என தெரிவித்த தமிமுன் அன்சாரி, சாதி-மத உணர்வுகளை தூண்டுகிற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அத்துடன், அதிமுக – பா.ஜ.க கூட்டணி ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட ஒன்றுதான் என தெரிவித்த தமிமுன் அன்சாரி, இது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல எனவும், இதுகுறித்து அதிமுக தொண்டர்கள் தான் கவலைப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.