சீட் கிடையாது… அஞ்சே கோரிக்கைகள் – சிம்பிளாக அன்சாரியை வளைத்து போட்ட ஸ்டாலின்!

சீட் கிடையாது… அஞ்சே கோரிக்கைகள் – சிம்பிளாக அன்சாரியை வளைத்து போட்ட ஸ்டாலின்!

2016ஆம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி ஆரம்பித்த உடனே அதிமுகவில் கூட்டணியில் இணைந்து வெற்றிவாகையும் சூடியவர் தமிமுன் அன்சாரி. ஜெயலலிதா இறப்புக்குப் பின் அதிமுக அரசின் செயல்பாடுகளில் அவருக்கு ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டது. குறிப்பாக சிஏஏவுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டதே அவரைக் கோபத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றது. இதையடுத்து எடப்பாடி அரசை தொடர்ந்து விமர்சித்துவந்தார். சமீபத்தில் கூட பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து சட்டப்பேரவைக்கு சைக்கிளிலேயே வந்தார்.

சீட் கிடையாது… அஞ்சே கோரிக்கைகள் – சிம்பிளாக அன்சாரியை வளைத்து போட்ட ஸ்டாலின்!

சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அதிமுகவை நிராகரித்துவிட்டார். தேர்தல் அறிவிப்புக்குப் பின் திமுகவை ஆதரிப்பதாக கடிதம் ஒன்றை அளித்தார். அதிமுக போல் திமுகவும் ஒரு சீட் ஒதுக்கும் என்ற நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆதரவு கொடுத்த மறுநாளே வாபஸ் பெற்றுக்கொண்டார். இச்சூழலில் இன்று அண்ணா அறிவாலயத்துக்கு வருகைதந்தார். ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அன்சாரியின் ஐந்தம்ச கோரிக்கைகளை ஏற்பதாக உறுதியளித்ததன் காரணமாக திமுக ஆதரவு நிலைப்பாட்டை மீண்டும் எடுத்துள்ளார் அன்சாரி.

சீட் கிடையாது… அஞ்சே கோரிக்கைகள் – சிம்பிளாக அன்சாரியை வளைத்து போட்ட ஸ்டாலின்!

ஸ்டாலினைச் சந்தித்துவிட்டுப் பேசிய அன்சாரி, மனித நேய ஜனநாயக கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது.
பாசிச, சமூகநீதி சக்திகளுக்கு எதிரான வாக்குகள்,மத சார்பின்மைக்கு எதிரான வாக்குகள் சிதறிப் போய்விடக் கூடாது என்கிற உன்னத லட்சியத்தைலக் காப்பாற்ற வேண்டிய முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவளிக்கும் விதத்தில் அதன் தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து 5 அம்ச அடிப்படையில் ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருந்தோம்.

சீட் கிடையாது… அஞ்சே கோரிக்கைகள் – சிம்பிளாக அன்சாரியை வளைத்து போட்ட ஸ்டாலின்!

தேர்தல் தொகுதி பங்கீடு குறித்தும் குறிப்பிட்டிருந்தோம். தேர்தல் அரசியலில் தொகுதி பங்கீடு மிக முக்கியம். அது கிடைக்காத சூழ்நிலையில் அதனால் வருத்தமுற்று சர்ச்சையாகி அதனால் மதச்சார்பற்ற வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்கிற நிலையில் 5 அம்ச கோரிக்கைகளை அளித்து ஆதரவை வழங்கியுள்ளோம்.

சீட் கிடையாது… அஞ்சே கோரிக்கைகள் – சிம்பிளாக அன்சாரியை வளைத்து போட்ட ஸ்டாலின்!

10 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக்கைதிகளை திமுக ஆட்சி அமைந்தவுடன் பரிசீலித்து விடுதலை செய்திட வேண்டும். பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல் படுத்தவேண்டும். சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். தொகுதி கிடைக்காதது வருத்தமே” என்றார்.