darbar
  • January
    17
    Friday

Main Area

Main



பாக்ஸ் ஆபீஸில் ‘சர்கார்’ ஆட்சி: விண்ணை முட்டும் முதல் நாள் வசூல்!

sarkarvijay
sarkarvijay

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் இமாலய சாதனை படைத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (நவ.6) உலகம் முழுவதும் வெளியானது. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல், பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்துள்ளது.

பாக்ஸ் ஆபீஸ் கிங்கான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சாதனையை முறியடித்து விஜய் முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முன்னிலையில் இருந்த ரஜினியின் ‘காலா’ படத்தை பின்னுக்கு தள்ளி ‘சர்கார்’ முன்னிலை வகிக்கிறது. சென்னையில் மட்டும் முதல் நாள் வசூலாக ரூ.2.37 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு முன்பாக வெளியான விஜய்யின் ‘மெர்சல்’, ‘தெறி’ படங்களின் வசூல் சாதனையை ‘சர்கார்’ முறியடித்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளிலும் ‘சர்கார்’ திரைப்படம் வசூல் வேட்டையாடியுள்ளது.

சர்கார் ஓவர்சீஸ் வசூல் நிலவரம்:

அமெரிக்காவில் $329k – ரூ.2.39 கோடி

கனடாவில் $87kரூ.63.2 லட்சம்

ஆஸ்திரேலியாவில் $215kரூ.1.56 கோடி

ஃபிரான்ஸ் 2160 – ரூ.1.80 லட்சம்

சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் திரையுலகம் மட்டுமின்றி ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளது. வெளியான முதல் நாள் வசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை, உலக அளவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று சாதனை படைத்துள்ளது. அடுத்து வரும் வார இறுதி நாட்களிலும் பாக்ஸ் ஆபீஸை ‘சர்கார்’ ஆட்சி செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.