kaappan-mobile kaappan-large
  • September
    22
    Sunday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


விஜய் ரசிகர்களுக்கு இன்றைக்கு 6மணிக்கு செம ட்ரீட் இருக்கு பாஸ்... 

விஜய் ரசிகர்களுக்கு இன்றைக்கு 6மணிக்கு செம ட்ரீட்
விஜய் ரசிகர்களுக்கு இன்றைக்கு 6மணிக்கு செம ட்ரீட்
Loading...

சென்னை: தளபதி 64 படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கிவரும் தளபதி 63 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

கால்பந்து குழுவின் பயிற்சியாளராக விஜய் நடித்து வரும் இப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது. இதற்கிடையில் தளபதி 64 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் செப்டம்பர் முதல் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

பின்பு 2020ஆம் ஆண்டு பொங்கலுக்குப் படத்தை வெளியிடப் படக்குழுத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் இன்று 6மணிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அனேகமாக அதில் இந்த படத்தில் பணியாற்றவுள்ள நடிகர், நடிகைகள் அல்லது படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் எதாவது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ட்விட்டரில் #Thalapathy64 என்ற ஹாஸ் டாக் ட்ரெண்டாகி வருகின்றன.

2018 TopTamilNews. All rights reserved.