• April
    09
    Thursday

Main Area

Main



ஒரே நேரத்தில்.. ஒரே இடத்தில் நடக்கவுள்ள 'தலைவர் 168', 'தல 60' படங்களின் ஷூட்டிங் !

thalaivar 168 and thala 60
thalaivar 168 and thala 60

சூப்பர் ஸ்டாரின் 'தலைவர்168' திரைப்படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும்,  டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இதில் குஷ்பூ, மீனா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். நாளை சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளன்று தொடங்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

ttn

இதே போல நடிகர் அஜித் நடிக்கவுள்ள 60 ஆவது படத்தை போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ளது. இந்த படத்தில்  ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த படத்தில் தல முறுக்கு மீசையுடன் கம்பீரமான போலீஸ் கதாபாத்திரத்தில் மீண்டும் மாறியுள்ளதாகப் புகைப்படங்கள் வைரலாகி வந்தன. 

ttn

இந்நிலையில்,  'தலைவர் 168' மற்றும் 'தல 60' ஆகிய இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. பொதுவாக மார்கழி மாதத்தில் படக்குழுக்கள் ஷூட்டிங்கை தொடங்க மாட்டார்கள். வரும் 16 ஆம் தேதியோடு கார்த்திகை மாதம் முடிவடைவதால் அதற்குள்ளேயே இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் சூப்பர் ஸ்டார் மற்றும் தல ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் ஆவலையும் கூட்டியுள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.