• February
    17
    Monday

Main Area

Main



விரைவில் டிரைலர்..! ‘விஸ்வாசம்’ திருவிழாவை ஜமாய்க்க தல ரசிகர்கள் தீவிரம்

thalaajith
thalaajith

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வரிசையில் 4வது முறையாக இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ளது ‘விஸ்வாசம்’ திரைப்படம். இதில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

டி.இமான் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்த நிலையில், படத்தின் டீசரை வெளியிடுமாறு தல ரசிகர்கள் படக்குழுவிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் டிரைலரை நாளை (ஜன.30) வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

viswasam

சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ டிரைலர் மாஸான பஞ்ச் வசனங்களுடன் வெளியாகி டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்கு போட்டியாக அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட டிரைலரை ட்ரெண்டாக்க தல ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.