• March
    31
    Tuesday

Main Area

Main



தல எப்பவும் தல தான்: செம காட்டு காட்டிவிட்டு ஸ்டண்ட் கலைஞர்களைத் தூக்கி விட்ட அஜித்! 

தல அஜித்
தல அஜித்

சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தின் ஆக்ஷன் சண்டைக் காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

தல அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் கடந்த 8ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான இதில் தல அஜித்திற்காக சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் நோ என்று சொன்னால் அதற்கு அர்த்தம் நோ என்று அஜித் பேசிய வசனத்திற்கு திரையரங்ககுளில் விசில் சத்தம் பறந்தது. 

யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி கொடுத்துள்ள நேர்கொண்ட பார்வை படத்திற்கும் சூர்யா மற்றும் ரஜினிகாந்த் பாராட்டுகளைத் தெரிவித்தனர். 

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித் சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அதில்  அசலாட்டாக ஸ்டண்ட் கலைஞர்களை செம காட்டு காட்டிவிட்டு, சண்டைக் காட்சி முடிந்த பிறகு கீழே விழுந்துள்ளவர்களைத் தல தூக்கியுள்ளார். அது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்ததால் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பட்டு வருகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.