ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட தல அஜித் : வைரல் வீடியோ

 

ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட தல அஜித் :  வைரல் வீடியோ

தமிழக சட்டமன்ற தேர்தல் காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கும் நிலையில் பல இடங்களில் குளறுபடிகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட தல அஜித் :  வைரல் வீடியோ

இன்று காலை முதல் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ந்து தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய், நடிகர் சூர்யா ,கார்த்தி, நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தங்கள் வாக்கினை செலுத்தி தங்கள் கட்சி ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர். குறிப்பாக நடிகர் அஜித் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடக்கும் முன்பே கிட்டத்தட்ட 20 நிமிடத்திற்கு முன்பாக திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவி ஷாலினியுடன் வருகை புரிந்தார். அப்போது அவரைக் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் அஜித் தனது வாக்கினை அளித்து விட்டு அங்கிருந்து சென்றார்.

இதனிடையே தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை அஜித் பிடுங்குவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்த நிலையில் அதற்கு விளக்கமளிக்கும் வகையில் மற்றொரு வீடீயோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதில் தன் செல்போனை பிடிங்கிய நபரிடம் சென்று பேசும் அஜித், கொரோனா காலத்தில் நீங்கள் மாஸ்க் அணியாமல் வந்துள்ளீர்கள் என்று கூறியதுடன் , அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு சென்றார். கொரோனா பேரிடர் காலத்தில் அனைவரின் பாதுகாப்பு கருதி அஜித் அவ்வாறு நடந்து கொண்டது கவனிக்கத்தக்கது.