பெண்கள் கூடி வடம் பிடித்து தேர் இழுத்த தைப்பூச திருவிழா!

 

பெண்கள் கூடி வடம் பிடித்து தேர் இழுத்த தைப்பூச திருவிழா!

தருமபுரி முருகன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி பெண்கள் வடம் பிடித்து தேர் இழுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ளது அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு கடந்த 24ஆம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது.

பெண்கள் கூடி வடம் பிடித்து தேர் இழுத்த தைப்பூச திருவிழா!

இதில் முக்கிய நிகழ்வாக வடம் பிடித்து தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். இந்த விழாவில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து தேரை இழுத்து சிறப்புமிக்கதாக பார்க்கப்பட்டது.

பெண்கள் கூடி வடம் பிடித்து தேர் இழுத்த தைப்பூச திருவிழா!

வீதியில் சாமி ஊர்வலம் வரும் போது பக்தர்கள் உப்பு, மிளகு, பொரி ஆகியவற்றை தேர் மீது வீசி நேர்த்தி கடன்களை செலுத்தினர். இந்த விழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். தேர்த்திருவிழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100ற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.