தைப்பூசம் : முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் கோலாகலக் கொண்டாட்டம்!

தைப்பூசம் : முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் கோலாகலக் கொண்டாட்டம்!

தைப்பூசத் திருவிழாவையொட்டி, முருகனின் அறுபடை வீடுகளில் வெகு விமர்சையாக பூஜைகள் நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜனவரி 28ஆம் தேதி தமிழ் கடவுளான பெருமானை வழிபடும் வகையில் தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் மலேசியா ,சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இன்று தைப்பூச தினத்தையொட்டி, மக்களின் கோரிக்கையை ஏற்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பூசம் : முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் கோலாகலக் கொண்டாட்டம்!

இந்தநிலையில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் கோலாகலமாக தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை வடபழனி முருகன் கோவிலில் விமர்சையாக வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் பால்குடம், காவடி எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தைப்பூசம் : முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் கோலாகலக் கொண்டாட்டம்!

பழனியில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. திருப்பரங்குன்றத்தில் 16 வகையான அபிஷேகங்களுடன் இன்று காலை தீபாராதனை நடைபெற்றது. திருவிழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தைப்பூசம் : முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் கோலாகலக் கொண்டாட்டம்!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகிறது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக கடலூர் மாவட்டம் வடலூரில் அமைந்திருக்கும் சத்திய ஞான சபையில், தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தைப்பூசம் : முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் கோலாகலக் கொண்டாட்டம்!

விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச விழாவையொட்டி இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, நாளை காலை 5:30 மணி வரையில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறவிருக்கிறது. இதனைக் காண ஆயிரக் கணக்கான மக்கள் அங்கு குவிந்துள்ளனர்.