தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் கார்த்திகை தீபத்தையொட்டி, நேற்று சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தர்ராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தையொட்டி, லட்ச தீப வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

இந்த ஆண்டு கொரோனா காரணமாக அரசு வழிகாட்டுதலின் படி கோயில் வளாகத்தில் பத்தாயிரம் களிமண் சிட்டி விளக்குகளை மட்டும் வைத்து, சிறப்பு தீப வழிபாடு நடத்தப்பட்டது. இதற்காக மாலை 6 மணி அளவில் கோயிலில் மணி அடிக்க, பக்தர்களும், குழந்தைகளும் கார்த்திகை விளக்குகளில் தீபம் ஏற்றினர். தொடர்ந்து, சவுந்தர்ராஜ பெருமாள் சன்னதியில் இருந்து திருக்கோடி தீபத்துடன் எழுந்தருளி, ராஜகோபுரம் முன் வந்து தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

பின்னர் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் அர்த்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியின் இறுதியில், கோயில் முன் அமைக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.