தேனாம்பேட்டையிலும் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை எட்டியது..!

 

தேனாம்பேட்டையிலும் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை எட்டியது..!

சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே கிட்டத்தட்ட 33 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும், கொரோனா பரவுவது குறைந்ததாக இல்லை. அதனால் மக்களிடையே கொரோனாவை பற்றிய விழுப்புணர்வை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மண்டலவாரி பாதிப்பு விவரத்தை வெளியிட்டு வருகிறது.

தேனாம்பேட்டையிலும் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை எட்டியது..!

அதன் படி இன்று அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,364 பேரும் தண்டையார் பேட்டையில் 4,226 பேரும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 4,031 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னையின் மொத்த பாதிப்பு 33,244 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை எட்டியதைத்தொடர்ந்து, தண்டையார்பேட்டையிலும் பாதிப்பு 4 ஆயிரத்தை எட்டியது. இந்த நிலையில் தற்போது 4 ஆயிரம் பாதிப்பை எட்டிய மூன்றாவது மண்டலமாக தேனாம்பேட்டை மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.