நூல் விலை உயர்வை கண்டித்து, ஈரோட்டில் நாளை ஜவுளி நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

 

நூல் விலை உயர்வை கண்டித்து, ஈரோட்டில் நாளை ஜவுளி நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

ஈரோடு

நூல் விலை உயர்வை கண்டித்து, ஈரோடு மாவட்ட ஜவுளி வியாபாரிகள் நாளை ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஜவுளி மற்றும் துணி வியாபாரிகள் சங்க செயலாளர் சிதம்பரம் சரவணன், கடந்த சில மாதங்களாக பஞ்சு விலை அதிகபட்சமாக 10 சதவீதம் கூட உயரவில்லை என்றும், ஆனால் நூல் வெளியானது 40 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த மாதம் 195 ரூபாயாக ஆக இருந்த, 40 ஆம் நம்பர் வார்ப் நூல் கோன் ஒன்றின் விலை, தற்போது 235 ரூபாயாக உயர்ந்து உள்ளதாகவும், இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் கூறினார்.

நூல் விலை உயர்வை கண்டித்து, ஈரோட்டில் நாளை ஜவுளி நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

குறிப்பிட்ட ரக நூலினை அதிகளவில் உற்பத்தி செய்து, பிற ரக நூலை தேவைக்கு குறைவாக உற்பத்தி செய்து செயற்கையான தட்டுப்பாட்டினை ஏற்படுத்துவதாகவும் சரவணன் குற்றம்சாட்டினார். எனவே, மாதத்திற்கு ஒன்று அல்லது 2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே நூல் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி நாளை ஈரோடு மாவட்ட ஜவுளி விற்பனை நிறுவனங்கள், கடைகள், குடோன் ஆகியவை ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளதாக தெரிவித்தார். இந்த போராட்டத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் என்றும் அவர் கூறினார்