• February
    25
    Tuesday

Main Area

Main



டெட் தேர்வின் 2ம் தாள் முடிவு: 1% பேர் மட்டுமே தேர்ச்சி என தகவல்!

டெட்
டெட்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வில் இரண்டாம் தாளில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேரடியாக பணியில் நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையில் போட்டி தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பனி நியமனம் வழங்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. 

tet

அதன்படி டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள், ஜூன் மாதம் 8ம் தேதியும், இரண்டாம் தாள் 9ம் தேதியும் நடைபெற்றது. இதில் முதல் தாளை சுமார் 1 லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதினர்.இதற்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளியான  நிலையில், இதில் 500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.

tet

இந்நிலையில்  இரண்டாம் தாள் முடிவுகள் நேற்று  வெளியானது. இதில் 1% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தேர்வு எழுதிய  3,79,733 பேர்களில் 300 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமான தகவலை இன்னும் வெளியிடவில்லை
 

2018 TopTamilNews. All rights reserved.