கொரோனாவுக்கு சித்த மருத்து பயன்படுமா என ஆய்வு – ஆயுஷ் அமைச்சகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

கொரோனாவுக்கு சித்த மருத்து பயன்படுமா என ஆய்வு – ஆயுஷ் அமைச்சகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கொரோனாவைத் தடுக்கும் திறன் சித்த மருந்துக்கு உள்ளதா என்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறையின் கீழ் உள்ள ஆயுஷ் அமைச்சகம் ஆய்வு செய்து ஆகஸ்ட் 3ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவுக்கு சித்த மருத்து பயன்படுமா என ஆய்வு – ஆயுஷ் அமைச்சகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
இந்தியாவில் இந்திய மருத்துவ முறைகளில் ஆயுர்வேதத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சித்த மருத்துவம் உள்ளிட்ட மற்ற பிரிவுகளுக்கு வழங்கப்படுவது இல்லை. டெங்குவை நிலவேம்பு கஷாயம் கட்டுப்படுத்தும், பப்பாளி இலை, நொச்சி இலை உள்ளிட்டவை நல்ல பலனைத் தரும் என்று சித்த மருத்துவர்கள் போராடி மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தார்கள். அதை அப்படியே ஆயுர்வேத மருந்தாக மாற்றி டெங்குவுக்கு ஆயுர்வேதம் தீர்வளிப்பதாக கூறிக்கொண்டார்கள்.
தற்போது கபசுர குடிநீர் உள்ளிட்டவற்றை ஆயுர்வேதத்துக்கு மாற்றி ஆயுர்வேதத்தில் மருந்து கண்டுபிடித்துவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன. சித்த மருத்துவர்கள் கூறும் எதையும் யாரும் பொருட்படுத்துவது இல்லை.

கொரோனாவுக்கு சித்த மருத்து பயன்படுமா என ஆய்வு – ஆயுஷ் அமைச்சகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்பிரமணியன் என்பவர் 66 மூலிகைகளை உள்ளடக்கிய இம்ப்ரோ என்ற பொடி கொரோனாவுக்கு எதிராக ஆற்றலுடன் செயல்படுகிறது என்று கூறி, இதை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடக்கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மதுரை மருத்துவர் தயாரித்த மருத்துவ பொடி கிருமியைக் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டதாக உள்ளது என்று கூறியிருந்தனர். இதைத் தொடர்ந்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் இந்த மருந்து பொடிக்கு கொரோனாவைக் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகிற 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.