மூன்று நாட்களாக தினமும் ஆறு லட்சம் பேருக்குச் சோதனை – இந்தியாவில் கொரோனா நிலவரம்

மூன்று நாட்களாக தினமும் ஆறு லட்சம் பேருக்குச் சோதனை – இந்தியாவில் கொரோனா நிலவரம்

நான்கு மாதங்களாக இந்தியாவின் தீராத பிரச்னை கொரோனா நோய்த் தொற்றுதா. நாள்தோறும் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை. இன்றைய தேதி வரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வில்லை என்பதே பெரும் சோகமான செய்தி.

பல நாட்டு விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயன்று வருகின்றனர். பல கட்ட சோதனைகளில் தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என நம்புவோம்.

மூன்று நாட்களாக தினமும் ஆறு லட்சம் பேருக்குச் சோதனை – இந்தியாவில் கொரோனா நிலவரம்

கொரோனா தொற்றைத் தடுக்க பரிசோதனைகளை அதிகப்படுத்துவதும், பாசிட்டிவ் முடிவு தெரிந்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதுமே ஒரே வழி. அதற்காக இந்தியாவில் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பை விரைவில் கண்டறிந்து, தடம் அறிந்து, சிகிச்சை அளிப்பது என்ற உத்தியைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆறு லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மூன்று நாட்களாக தினமும் ஆறு லட்சம் பேருக்குச் சோதனை – இந்தியாவில் கொரோனா நிலவரம்

ஒரு நாளைக்கு செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு வகுத்த உத்தியின் விளைவாக,  ஒரு நாளைக்கு 10 லட்சம் பரிசோதனைகள் என்ற இலக்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு கடந்த 24 மணி நேரத்தில் 6,64,949 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைய நிலவரப்படி ஒட்டுமொத்த பரிசோதனைகள் 2,21,49,351-ஐ எட்டியுள்ளன. சோதனைகளின் எண்ணிக்கை, பத்து லட்சம் பேருக்கு 16,050 ஆக அதிகரித்துள்ளது.

மூன்று நாட்களாக தினமும் ஆறு லட்சம் பேருக்குச் சோதனை – இந்தியாவில் கொரோனா நிலவரம்

நாட்டின் பரிசோதனைக் கூடங்களின் கட்டமைப்பு, தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு  தற்போது 1370 ஆய்வகங்கள் கொவிட் தொற்று பரிசோதனைகளை மேற்கொள்கின்றன. இதில் அரசு துறையில் 921 ஆய்வகங்களும், தனியார் துறையில் 449 ஆய்வகங்களும் இயங்கி வருகின்றன.