முதல் டெஸ்ட் போட்டி- 2ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தம்

 

முதல் டெஸ்ட் போட்டி- 2ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தம்

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் நகரின் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இந்திய அணியை பொறுத்தவரை பும்ரா 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

முதல் டெஸ்ட் போட்டி- 2ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தம்

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 13 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்களை எடுத்திருந்தது.இன்று தொடர்ந்து பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகவும் பொறுப்புடன் ஆடினர்.முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடியை ராபின்சன் பிரித்தார்.நிதானமாக ஆடி வந்த ரோகித் சர்மா 36 ராபின்சனின் பவுன்சர் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த புஜாரா 4 ரன்களிலும்,கோலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆண்டர்சனின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த துணை கேப்டன் ரகானேவும் 5 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.46.2 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் இரண்டாம் நாள் ஆட்டம் இத்துடன் முடிப்பதாக அறிவிக்கப்பட்டது தொடக்க ஆட்டக்காரரான ராகுல் 57 ரன்களுடனும்,விக்கெட் கீப்பர் ரிசப் பன்ட் 7 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.