இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் டிரா

 

இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் டிரா

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் நகரின் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கியது.

இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் டிரா

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அபாரமாக பந்துவீசிய இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 84.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 278 ரன்களை எடுத்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 84 ரன்கள் எடுத்தார்.இதன் மூலம் 95 ரன்கள் பின்னடைவுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 85.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 303 ரன்களை எடுத்தது.இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் ஜோ ரூட் 109 ரன்கள் குவித்தார்.இந்திய அணி தரப்பில் அட்டகாசமாய் பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் டிரா

இதன் மூலம் இந்திய அணிக்கு 209 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்களை எடுத்திருந்தது.ரோஹித் மற்றும் புஜாரா ஆகியோர் தலா 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் நாட்டிங்காம் நகரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு 157 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் இன்று ஒரு பந்துகள் கூட பேச முடியாத அளவுக்கு வானிலை இந்தியாவை சோதித்தது.இந்திய நேரப்படி இரவு 8.20 மணிக்கு ஆட்டம் சமனில் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வெற்றியின் அருகில் வந்து மழையினால் ஆட்டம் சமனில் முடிந்தால் ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர்.