9 நாட்களில் 1 கோடி பேருக்கு பரிசோதனை – இந்தியாவில் கொரோனா

9 நாட்களில் 1 கோடி பேருக்கு பரிசோதனை – இந்தியாவில் கொரோனா

கொரொனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளில் முதன்மையானது இந்தியா. இங்கேதான் அதிக புதிய நோயாளிகளும் அதிக மரணங்களும் நிகழ்கின்றன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 24 லட்சத்து  41 ஆயிரத்து 738 பேர்.    

9 நாட்களில் 1 கோடி பேருக்கு பரிசோதனை – இந்தியாவில் கொரோனா

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 39 லட்சத்து 48 ஆயிரத்து 020 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 88 ஆயிரத்து 196 பேர்.

9 நாட்களில் 1 கோடி பேருக்கு பரிசோதனை – இந்தியாவில் கொரோனா
கொரோனா வைரஸ்

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில்இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் சுமார் 15 லட்சம் கொவிட் பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில், 14,92,409 பரிசோதனைகள் செய்யப்பட்டது. இது வரை மொத்தம் சுமார் 7 கோடி (6,89,28,440) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் பரிசோதனை கட்டமைப்பு அதிகரித்துள்ளதைஇந்த பரிசோதனை எண்ணிக்கை உயர்வு காட்டுகிறது.

9 நாட்களில் 1 கோடி பேருக்கு பரிசோதனை – இந்தியாவில் கொரோனா

கடைசி 1 கோடி பரிசோதனைகள் வெறும் 9 நாளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மில்லியன் மக்களுக்கான பரிசோதனைஇன்று 49,948 என்ற அளவில் உள்ளது. அதிகளவல் பரிசோதன மேற்கொள்ளப்படுவதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதிகளவில் பரிசோதனை செய்யும் மாநிலங்களில்பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

நாட்டின் மொத்த பாதிப்பு அளவு இன்று 8.44%-மாக உள்ளது.

9 நாட்களில் 1 கோடி பேருக்கு பரிசோதனை – இந்தியாவில் கொரோனா

பரிசோதனை கட்டமைப்பு வரிவாக்கத்தால்மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் தினசரி பரிசோதனைகள் அதிகரித்துள்ளன. 23 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ஒரு மில்லியன் பேருக்கான பரிசோதனை தேசிய சராசரிய அளவை விட  (49,948) அதிகமாக உள்ளது.

தற்போது, நாட்டில் மொத்தம் 1818 பரிசோதனை கூடங்கள் உள்ளன. இவற்றில் 1084 அரசுத்துறை. 734 தனியார்  துறையைச் சேர்ந்தது.