பாகிஸ்தான் கராச்சி பங்குச் சந்தை தலைமை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் கராச்சி பங்குச் சந்தை தலைமை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கராச்சி: பாகிஸ்தான் கராச்சி பங்குச் சந்தை தலைமை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பங்குச் சந்தை தலைமை அலுவலகத்தில் தீவிரவாதிகள் குழு திடீர் தாக்குதல் நிகழ்த்தினர். இந்த சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தீவிரவாதிகளும், வர்த்தக தளத்திலுள்ள போலீசாரும் சண்டையிட்டு வருகின்றனர். தீவிரவாதிகள் கட்டிடத்தை கையெறி குண்டுகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த கட்டிடம் உயர் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ளது மற்றும் பல தனியார் வங்கிகளின் தலைமை அலுவலகங்களையும் கொண்டுள்ளது. ஒரு போலீஸ் அதிகாரியும், கட்டிடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு பாதுகாப்பு காவலரும் இந்த திடீர் தாக்குதலால் காயமடைந்துள்ளனர். மேலும் பங்குச் சந்தைக்குள் பலரும் சிக்கியுள்ளதால் பெரும் அச்சம் நிலவி வருகிறது. அவர்களை மீட்கும் நோக்கில் போலீசார் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

- Advertisment -

Most Popular

“காதலிக்க நான் ,கல்யாணத்துக்கு அவனா?”-இரண்டாவது கல்யாணம் செய்யவிருந்த பெண்ணை கொன்ற காதலன் ..

தான் காதலித்த பெண் தன்னை கழட்டி விட்டுவிட்டு ,வேறொருவரை திருமணம் செய்ய இருப்பதை கேள்விப்பட்ட அவரின் காதலன் அவரை திருமணத்தன்றே பியூட்டி பார்லரிலேயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது . மத்தியபிரதேச மாநிலம் ரத்தலம்...

மாஸ்டர் வார்த்தை நீக்கம்… பேர் அண்ட் லவ்லியைத் தொடர்ந்து ட்விட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

ஒருபுறம் கொரோனா என்ற கொடூரன் மக்களின் உயிரை வாரி சுருட்டிக் கொண்டு போய்க்கொண்டிருக்க மறுபுறம் மனிதர்கள் மீது மனிதர்களே நிகழ்த்தும் வன்மங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தைச் சேர்ந்த நபர்...

‘வைஃபை, டிவி’ அதிநவீன வசதிகளுடன் உருவாகியுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை; நாளை திறப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால், சிகிச்சை அளிக்கப் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் விதமாகப் பல கல்லூரிகள், பள்ளிகள், அரங்கங்கள் கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை...

கொரோனாவைக் காரணம் காட்டி ஏலக்காய் தோட்டத்துக்குள் அனுமதிக்க மறுக்கும் கேரளா! – விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி இடுக்கு மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்களுக்கு செல்ல தமிழக விவசாயிகளை கேரள அரசு மறுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டம்...
Open

ttn

Close