சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால் காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துள்ளது – மத்திய அரசு தகவல்

 

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால் காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துள்ளது – மத்திய அரசு தகவல்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவு ஆளும் பாஜக ஆட்சியால் நீக்கப்பட்டது. இதனால் நாடு முழுக்க இதையொட்டி கடும் விவாதம் எழுந்தது. தற்போது நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகத்திடம் எழுப்பப்பட்ட கேள்விகான பதிலில் முக்கியமான விஷயத்தைப் பற்றிய தகவலும் இடம்பெற்றிருக்கிறது.

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவம் குறைந்திருக்கிறது என்று மத்திய அரசு எழுத்துப்பூர்வமான பதிலில் குறிபிடப்பட்டுள்ளது.

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால் காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துள்ளது – மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் குறிப்பில், ’கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பிகார், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள் மிகத் தீவிரமாக இருப்பதாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனது கொள்கையைப் பரப்ப சமூக ஊடக தளங்களை ஐஎஸ் பயன்படுத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட முகமைகள் இணைய வெளியை தொடர்ந்து கண்காணித்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால் காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துள்ளது – மத்திய அரசு தகவல்

நாட்டின் அரசியலமைப்பின் படி காவல் துறையும் பொது அமைதியும் மாநிலப் பட்டியலில் இருந்தாலும், தடவியல் ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகளின் அதிகரித்தல் மற்றும் மேம்பாட்டுக்காக மத்திய உள்துறை விவகாரங்கள் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ளன. 2018 ஜூன் 29 முதல் 2019 ஆகஸ்ட் 4 வரையிலான 402 நாட்களில் 455 தீவிரவாத சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், 2019 ஆகஸ்ட் 5 முதல் 2020 செப்டம்பர் 9 வரையிலான 402 நாட்களில் 211 தீவிரவாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளன,  

 2019 ஆகஸ்ட் 5 முதல் 2020 செப்டம்பர் 9 வரை எந்த பெரிய தீவிரவாத சம்பவமும் நாட்டில் நடைபெறவில்லை’ என்று குறிபிடப்பட்டுள்ளது.