புல்லட் ரயிலுக்கு டெண்டர் தொடக்கம் !

 

புல்லட் ரயிலுக்கு டெண்டர் தொடக்கம் !

புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புல்லட் ரயிலுக்கு டெண்டர் தொடக்கம் !

மும்பையில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் வரை புல்லட் ரயில் இயக்குவதற்கான திட்டத்தினை கடந்த ஆட்சி காலத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், 7 நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த முன்வரைவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கான் இன்ப்ராஸ்ட்ரெக்சர், இர்கான் இன்ஜினியரிங், ஜே.எம்.சி புராஜெக்ட்ஸ், எல் அண்ட் டி, டாடா புராஜெக்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் பெற ஆர்வம் கடடியுள்ளன.

திட்டப்பணிகள் தொடங்கினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 90 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். கட்டுமான பணிகளுக்கான உற்பத்தி துறையிலும் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர இயந்திரங்கள்தேவை அதிகரிக்கும் என்பதால் அந்த தொழிலும் வளர்ச்சி தூண்டப்படும்.

L&T, Tata Projects, JMC, NCC in race for India's first bullet train tender  | Business Standard News

இந்த திட்டத்துக்காக ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இது தவிர நாடு முழுவதும் 7 வழித்தடங்களில் புல்லட் ரயில் இயக்கப்படும் எம மத்திய அரசு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.