கொடைக்கானலில் திறக்கப்பட்ட 3 பூங்காக்கள் தற்காலிகமாக மூடல் – திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவு!

 

கொடைக்கானலில் திறக்கப்பட்ட 3 பூங்காக்கள் தற்காலிகமாக மூடல் – திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவு!

திண்டுக்கல்

கொடைக்கானலில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட 3 பூங்காக்களையும் தற்காலிகமாக மூட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டு உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் சிறப்புக்குரியது. கொரோனா ஊரடங்கு காரணமாக கொடைக்கானில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் கடந்த 75 நாட்களாக மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில், தமிழக அரசின் புதிய தளர்வுகள் காரணமாக நேற்று முன்தினம் மீண்டும் கொடைக்கானலில் உள்ள பூங்காக்கள் திறக்கப்பட்டன.

கொடைக்கானலில் திறக்கப்பட்ட 3 பூங்காக்கள் தற்காலிகமாக மூடல் – திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவு!

இதனை அடுத்து, அங்குள்ள பிரயண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா மற்றும் ரோஜா பூங்காங்களுக்கு வருகை தந்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் மலர்களை கண்டுகளித்தனர். இந்த நிலையில், அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றபோது, பூங்காவில் பொதுமக்கள் முக கவசம் அணியாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரயண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா மற்றும் ரோஜா பூங்காங்கள் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூட, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டு உள்ளார். இதனை தெரிவித்த கோட்டாட்சியர் முருகேசன், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர எந்த தடையும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.