விருதுநகர் மாவட்டத்தில் 28 பட்டாசு ஆலைகளுக்கு தற்காலிகமாக சீல்வைப்பு!

 

விருதுநகர் மாவட்டத்தில் 28 பட்டாசு ஆலைகளுக்கு தற்காலிகமாக சீல்வைப்பு!

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 28 பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக சீல் வைக்க, மாவட்ட ஆட்சியர் கண்ணன் உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதம் அடுத்தடுத்து 4 பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த வெடி விபத்துக்களில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், பட்டாசு ஆலைகள் அரசின் விதிகளை முறையாக கடைபிடிக்கிறதா? என ஆய்வு செய்ய, மாவட்ட ஆட்சியர் பல்துறை அதிகாரிகளை கொண்ட 7 கண்காணிப்பு குழுக்களை அமைத்து உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் 28 பட்டாசு ஆலைகளுக்கு தற்காலிகமாக சீல்வைப்பு!

இந்த குழுக்கள், திருத்தங்கல், குமாரலிங்கபுரம், பாறைப்பட்டி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் சோதனை மேற்கொண்டு, ஆட்சியருக்கு அறிக்கை வழங்கியது. அதில், பட்டாசு ஆலைகள் கூடுதல் ஆட்களை பணியில் ஈடுபடுத்தியது, பாதுகாப்பின்றி பட்டாசு தயாரித்தது, பதிவேடுகள் முறையாக இல்லாதது என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, விதிகளை மீறி செயல்பட்ட 28 பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடி சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் கண்ணன் உத்தரவிட்டார். அதன் பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று பட்டாசு ஆலைகளை பூட்டி சீல் வைத்தனர்.