தீபாவளி சிறப்புப் பேருந்துகள் எங்கிருந்து எங்கே?

 

தீபாவளி சிறப்புப் பேருந்துகள் எங்கிருந்து எங்கே?

சென்னையில் 6 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அதனால் அவர்களுக்கு வசதியாக ஆண்டுதோறும் கூடுதல் பேருந்துகளைத் தமிழக போக்குவரத்துத் துறை  இயக்கி வருகிறது. அதன்படி சென்னையில் 6இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி மற்றும் நவம்பர் 15 முதல் 18 ஆம் தேதி வரையிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சிறப்புப் பேருந்துகளின் வழித்தடங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு:

கோயம்பேடு:  மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ,திருச்சி, மதுரை ,திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில் ,கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ,விழுப்புரம் ,பண்ருட்டி ,நெய்வேலி ,கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் ,மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள்

தீபாவளி சிறப்புப் பேருந்துகள் எங்கிருந்து எங்கே?

மாதவரம் : செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள்

பூவிருந்தவல்லி : திருத்தணி, காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் மற்றும் செல்லும் பேருந்துகள்

தாம்பரம் சானடோரியம் : திண்டிவனம், விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்

கே.கே நகர் : ஈசிஆர் வழியாகப் புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

தாம்பரம்(ரயில் நிலையம்): போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், பண்ரூட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார்கோயில், புதுச்சேரி, செல்லூர் பேருந்துகள்(திண்டிவனம் வழியாக)